ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2

14

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 2 திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் முதன் முதலில் ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்திய திரைப்படம் ‘இந்தியன் 2’ என்ற பெருமையை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group