BREAKIING NEWS: வடக்கு, கிழக்குக்கு 8 பேர் கொண்ட நிபுணர் குழு : ஜனாதிபதி – விக்கி சந்திப்பில் உடன்பாடு

22

ஜனாதிபதி ரணில், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஷ்வரன் நேற்றய முக்கால் மணிநேர சந்திப்பில் வடக்கு,கிழக்கில் ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த குழுவில் எட்டுபேர் நியமிக்க ஆலோசனை கூறப்பட்டதுடன்
அந்த குழுவில்..

01)தலைவராக Dr.விக்கினேஷ்வரன் திருகோணமலை,

02)ஓய்வு நிலை காணி ஆணையாளர் குருநாதன், மட்டக்களப்பு.

03)ஓய்வு நிலை அரச அதிகாரி பத்மநாதன் மட்டக்களப்பு,

04)ஜனாதிபதி சட்டத்தரணி கணகேஷ்வரன்,யாழ்ப்பாணம்/கொழும்பு,

05)சட்டத்தரணி நிர்மலா சந்திரகாசன் யாழ்ப்பாணம்.

06) செல்லத்துரை யாழ்ப்பாணம் (இவரின் தகமை தெரியாது)

ஆகிய ஆறுபெயர்களை சி.வி.விக்கினேஷ்வரன் சிபார்சு செய்துள்ளதாகவும்.

மிகுதி இருவர் அல்லது நால்வரை ஜனாதிபதி ரணில் நியமிக்கவுள்ளதாகவும் நேற்றய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.!

இது நடைமுறைக்கு வருமா என்பதை அல்லது இந்த பெயர்களில் மாற்றம் வருமா என்பதை திறந்து தான் பார்க்க வேண்டும் என அரியநேந்திரன் எம்பி தெரிவித்தார்.

Join Our WhatsApp Group