4 அலுவலக ரயில் சேவைகள் இன்றும் இரத்து

16

இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை சேவையில் ஈடுபடவிருந்த 4 அலுவலக ரயில்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அலுவலக ரயில்களை இயக்குவதற்கு இன்றைய தினம் காலை சாரதி உதவியாளர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை என ரயில்வே சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்தார்.

இதன் காரணமாக கோட்டையிலிருந்து காலை பயணிக்க வேண்டிய பல அலுவலக ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை, பொல்கஹவெல மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group