3 குட்டிகளை ஈன்றெடுத்த புலி – மாண்ட 2 குட்டிகளை உண்டது

22

இந்தியாவில் உள்ள Corbett புலிக் காப்பகத்தில் பெண் புலியின் வயிற்றில் பொறி ஒன்று சிக்கிக்கொண்ட பின்பும் அது 3 புலிக்குட்டிகளை ஈன்றெடுத்தது.அவற்றில் 2 மாண்டன. மாண்ட இரண்டு குட்டிகளையும் தாய்ப் புலி உண்டதாக Times Of India தெரிவித்தது.

புலிக் காப்பகத்துக்குச் சென்றிருந்த 3 நிபுணர்கள், தாய்ப் புலியையும் அதன் குட்டிகளின் உடல்நலத்தையும் மதிப்பிட்டனர்.தாய்ப் புலியின் உடல்நலம் சீராய் இருந்தது. ஆனால் ஒரு குட்டி மாண்டுகிடக்கக் காணப்பட்டது.இரண்டாவது குட்டி நோய்வாய்ப்பட்டிருந்தது.அதனைக் காப்பாற்ற முயற்சி எடுக்கப்பட்ட போதும் அது மாண்டுவிட்டது.தாய்ப் புலியையும் எஞ்சியிருக்கும் குட்டியையும் பாதுகாக்க நினைத்த அதிகாரிகள், அவற்றுக்குத் தொந்தரவு கொடுக்காமல் விட்டுவிட்டனர்.

அடுத்த நாள் அதிகாரிகள் மாண்ட புலிக்குட்டிகளை மீட்கச் சென்றபோது அவற்றைக் காணவில்லை என்று Times Of India தெரிவித்தது.மாண்ட இரண்டு குட்டிகளையும் தாய்ப் புலி உண்டுவிட்டதாக நம்பப்படுகிறது.புலிகளிடையே அது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

Join Our WhatsApp Group