மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி! ரசிகர்கள் உற்சாகம்

13

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்பவர் கவுண்டமணி. 1980, 1990களில் இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என கூறும் அளவுக்கு பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.

இவருக்கு வயது முதிர்வு ஏற்பட்டாலும் தற்போது வரையில் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்றே கூறலாம்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கவுண்டமணி அடுத்து கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது. சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி போன்ற பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

சாய் ராஜகோபால் கூறுகையில், 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

ஒத்த ஓட்டு முத்தையா படம் அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை படமாக இருக்கும் என கூறினார்.

Join Our WhatsApp Group