பி,பி,சி. ஆங்கில சேவையில் நீண்டகாலம் பணிபுரிந்த ஜோர்ஜ் அழகையா நேற்று தனது , 67 வது வயதில் மறைந்தார். இவர் அம்பாறை மாவட்டம் கல்முனையை பூர்வீகமாகக் கொண்டவர். மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் கல்விகற்றவர். பின்னர் ஆபிரிக்க நாடானா கானாவில் வாழ்ந்து அதன்பின்னர் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு வந்து குடியேறியவர். 1989ல் பிபிசியில் ஊடகவியலாளராக சேர்ந்து ,ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்தவர்.2014ம் ஆண்டு குடற்புற் று நோயினால் பாதிக்கப்பப் பட்ட இவர் அதிலிருந்து மீண்டுவந்து பணியை தொடர்ந்திருந்தார். ஆனால் அது மீண்டும் அவரை தாக்கியதால் மீண்டும் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்ததாக அறியமுடிகின்றது.