பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் முயற்சி – உலகம் முழுவதும் தீவிரம்

15

உலகெங்கும் பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் முயற்சி தீவிரமடைகிறது.ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் பவளப்பாறைகளின் மறுசீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.அபுதாபி (Abu Dhabi) சுற்றுப்புற அமைப்பு பொருத்தமான சூழலில் பவளப்பாறைகளை வளர்த்து அவற்றைக் கடலில் விடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

உலகம் அறிவியல், தொழில்நுட்பம் முதலான துறைகளில் உன்னத நிலையை அடைந்தாலும் மனிதர்களால் சுற்றுச்சூழல் மாசடைவதையும் பார்க்கிறோம்.மனிதர்களின் பொறுப்பற்ற செயல்கள் பவளப்பாறைகளையும் விட்டுவைக்கவில்லை.இருப்பினும் பவளப்பாறைகளுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.உயரும் வெப்பம் இவற்றுக்குச் சாதகமாக அமையவில்லை.பவளப் பாறைகள் வெப்பத்தால் நிறமிழந்து இறுதியில் அழிவைச் சந்திக்க நேரிடுகிறது.

இவற்றை வளர்க்கப் பொருத்தமான வெப்பநிலை, சுத்தமான தண்ணீர், அளவோடு சூரிய வெளிச்சம் தேவை.இப்படிப் பவளப்பாறைகளை வளர்ப்பதுபற்றிப் பொதுமக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் ஆய்வாளர்கள் திட்டமிடுகின்றனர்.ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் குறிப்பாக துபாயில் வானுயர்ந்த கட்டடங்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்துக் குறைகூறப்பட்டு வந்துள்ளது.அதைச் சரிசெய்ய இதுபோன்ற முயற்சிகள் கைகொடுக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Join Our WhatsApp Group