தொழிற்சங்க போராட்டக்காரர்கள் கொழும்பினுள் பிரவேசிக்க தடை உத்தரவு

15

தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்பின் சில வீதிகளில் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஓல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி செத்தம் வீதி போன்றவற்றிற்குள் நுழைவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group