ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

18

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களையும் இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இந்த சர்வகட்சி கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானத்தினை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Join Our WhatsApp Group