இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹூ (Benyamin Netanyahu), நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சட்ட சீர்திருத்த மசோதா, ஜனநாயகத்துக்குத் தேவையான நடவடிக்கை என்று தற்காத்துப் பேசியிருக்கிறார்.அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது புதிய மசோதா.
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பை எதிர்த்தரப்புக் கட்சி புறக்கணித்தது.120 உறுப்பினர்களில் 64 பேர் புதிய மசோதாவுக்குச் சாதகமாக வாக்களித்தனர்.நாடாளுமன்றம், மசோதாவை ஏற்றுக்கொண்டபோது ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குறைந்தது 19 பேரைக் கைதுசெய்ததாக இஸ்ரேலியக் காவல்துறை சொன்னது.நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மசோதா குறித்து எதிர்த்தரப்போடு கருத்திணக்கம் காணும்படி அமெரிக்கா, இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.