கிழக்கு ஆளுநரின் உறுதிமொழி: மட்டக்களப்பில் உண்ணாவிரதத்தை கைவிட்ட விவசாயிகள்

31

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு விவாசாய அமைப்புக்கள் வேளாண்மை செய்த சிவப்பு, வெள்ளை நெல்களை கொள்வனவு செய்யுமாறு கோரி மட்டு மாவட்ட செயலகத்தின் முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பிக்க இருந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் கிழக்கு மாகாhண ஆளுநரின் உறுதி மொழியையடுத்து கைவிட்டுள்ளதாக விவாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் நீட்டு இன சிவப்பு,வெள்ளை மற்றும் போளை நெல்லினங்கள் உற்பத்தி செய்துவருகின்றனர் இந்த நிலையில் அரசாங்கம் சம்மா நெல்லை மாத்திரம் கொள்வனவு செய்கின்ற நிலையில் அதிகமாக வேளாண்மை செய்கையான ஏனைய நெல்களை கொள்வனவு செய்யததையிட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த நிலையில் அரசாங்கம் உற்பத்தி செய்த ஏனைய இன நெல்களை கொள்வனவு செய்யுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (25) கச்சேரிக்கு முன்னால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்க தீர்மாணித்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற இருந்தமையால் அங்கு பொலிசார் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கச்சேரிக்குள் உள்நுழை வோர்களை தீவிரமாக சோதனையிட்டதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட இருந்த விவசாயிகள் உள் நுழைய முடியாது கச்சேரியின் வெளிவாசலில்காத்திருந்த நிலையில் அங்கு வந்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் விவசாயிகளுடன் உரையாடி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூட்டிச் சென்று கலந்துரையாடினாட்.

இதன் பின்னர் ஆளுநர் மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில் நெல் கொள்வனவு தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்து ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

Join Our WhatsApp Group