கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

15

ரன்பொக்குனுகம மற்றும் கிரிந்திவெல ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் பூகொட நீர் உள்ளீர்ப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலைகள் காரணமாக நாளை 26ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6 மணி வரை 9 ½ மணித்தியாலங்கள் கம்பஹா மாவட்டத்தில் பூகொட, கிரிந்திவெல, ரன்பொக்குனுகம வீடமைப்பு தொகுதி, வத்துபிட்டிவெல, மாஇம்புல, மடுவகெதர, ஊராப்பொல, அத்தனகல்ல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Join Our WhatsApp Group