உக்ரைன் தானியங்கள் மீதான இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது- அதிபர் ஜெலென்ஸ்கி

13

கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு.
தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது. இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் தானியங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடகங்கள் மூலம் ஜெலென்ஸ்கி கூறுகையில், “தானியங்கள் இறக்குமதி எந்தவொரு கட்டுப்பாடும் நீட்டிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பா ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கு அதன் எல்லைகளை மூடுவதை விட பகுத்தறிவுடன் செயல்படும் நிறுவன திறனைக் கொண்டுள்ளது.

செப்டம்பர் 15 அன்று உக்ரேனிய தானியங்கள் குறைவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்” என்றார்.

Join Our WhatsApp Group