இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்ற 21 பேருக்கு விமான பயணச் சீட்டு

20

இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பு தொழில் வாய்ப்புகளை பெற்ற 21 இலங்கையர்களுக்கு விமான விமான பயணச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வு இன்று (25.07.2023) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
இந்தக் குழுவில் 18 பெண்களும் ,மூன்று ஆண் தொழிலாளர்களும் உள்ளடங்குவதுடன், இக்குழுவினர் 27.07.2023 அன்று இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ளனர்.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையில் 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றன. ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் , இதுவரையில் 441 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறையில் வேலை வாய்ப்புகளுக்கான உரிமைக்கட்டளை கிடைத்துள்ளன.


இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் வாய்ப்புக்கான அனுமதி உரிமைக்கட்டளை பெற்ற மேலும் 16 இலங்கையர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இஸ்ரேலுக்கு செல்ல உள்ளனர்.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலமே , இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுப்பதுடன் ,இஸ்ரேலில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வெளியாருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Join Our WhatsApp Group