அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீர் விநியோகத் தடை

16

அவசர திருத்த வேலைகள் காரணமாக நாளை 26ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 4 மணி முதல் பி.ப. 1 மணி வரை 9 மணித்தியாலங்கள் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் இறக்காமம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Join Our WhatsApp Group