‘டிஎஸ்- சாட்’ செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதனுடன், மேலும் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட், ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட ‘சி-55’ ராக்கெட் போன்று ‘கோர்-அலோன்’ என்ற நவீன பயன்பாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘டிஎஸ்- சாட்’ செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் செயற்கைக்கோள் பட தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. அத்துடன் எஸ்.டி. என்ஜினீயரிங் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல் மற்றும் துல்லியமாக பெறக்கூடிய படங்கள் மற்றும் ‘ஜியோஸ்பேஷியல்’ என்ற தொழில்நுட்ப துறைக்கு இதைப் பயன்படுத்த முடியும்.