அரசாங்கத்தின் அனுசரணையில் 220 இலட்சம் பேருக்கும் தரமற்ற மருந்துகள் வழங்கப்படுவதாகவும்,இது சரியா தவறா என்பதை கட்சி நிற,மத,சாதி பேதங்களை மறந்து தீர்மானிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பரிசோதனையில் சரிகானாத மருந்துகள் கூட சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் தகவல்களை மறைப்பதற்கான சட்டம் அன்றி தகவல்களை அறிந்து கொள்வதற்கான சட்டமே உள்ளது எனவும்,தகவல்களை மறைப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சுபீட்சத்தை நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்ட எமது நாடு அவலத்தின் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் இவ்வாறான நிலையில் நாட்டின் எதிர்கால ஆட்சியானது தூய ஆட்சியாக அமையப்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாதுவே உபநந்த தேரரருக்கு நற்சான்றிதழ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வலையொளி இணைப்பு-
♦️ https://youtu.be/1Dq_vY-RzAc