லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியன் 2 கிராபிக்ஸ் பணிகள்

18

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ். ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன்-2. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இப்படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் ஷங்கர், வி.எப்.எக்ஸ் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group