ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் – பயணிகள் அவதி

13

ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையினை முன்னிறுத்தி ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்று இரவு இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகளும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group