ரயில் எஞ்ஜின் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கையால் 21 ரயில் சேவைகள் இரத்து

16

ரயில் எஞ்ஜின் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திங்கட்கிழமை (24) காலையிலும் பல ரயில் சேவைகள்  இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய ரயில்  சேவைகளை ஆரம்பிப்பதற்கு  ரயில்வே திணைக்களம் முன்னெடுக்கும்  முயற்சிகளுக்கு எதிராகவே ரயில் எஞ்ஜின் சாரதிகள் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல்  தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று சுமார் 21 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதாக  ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் (போக்குவரத்து) தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (24) காலை சுமார் 11 அலுவலக ரயில்  சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாகவும்  இதன்படி பிரதான பாதையில் 5 ரயில்களும் புத்தளம் பாதையில் ஒரு  ரயிலும் வடக்கு ரயில் பாதையில் மற்றுமொரு சேவையும் இரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group