இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் கிட்டத்தட்ட 90,000 சுற்றுலா பயணி நாட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம், சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை பிரகாசத்துடன் கோடைகாலத்தை நோக்கி முன்னேறியுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களில் 89,724 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருககை தந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை விகிதத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று உலக முழுவதும் பரவியமையின் காரணமாக, இலங்கைக்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்தது.
சர்வதேச பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் சுற்றுலாத்துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனா தொற்றின் உலக சுகாதார அவசரநிலைக்குப் பிறகு இலங்கை அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. இது சுற்றுலாத்துறையில் மீள்வதற்கான பாதையில் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.
எவ்வாறாயினும், தீவிரமான ஊக்குவிப்பு முயற்சிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மூலம், இலங்கை இந்த ஆண்டு ஜூலை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண முடிந்தது.
இதுவரையான காலப்பகுதியில் ஜூலை மாதத்தில் 4,486 சுற்றுலா பயணிகள் நாளாந்த வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் முதல் 10 நாட்களில் 37,229 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். நாட்டின் சுற்றுலா துறையின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா காணப்பட்டுள்ளதுடன், நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலா பயணிகளில் 17 வீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் இருந்து 15,330 பேர் வருகை தந்துள்ளனர். 10,814 சுற்றுலா பயணிகளின் வருகை தந்து பிரித்தானியா இரண்டாவது இடத்தி உள்ளது. இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 11 சதவீதமாக உள்ளது.
5,963 சுற்றுலா பயணிகளின் வருகை தந்து சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 7 சதவீதமாக உள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களில், இலங்கை 137,594 சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட 65 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது.
ஜூலை மாதத்தில் மீதமுள்ள 11 நாட்களுக்குள் 47, 870 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரவேண்டும்.