குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி (நேரலை)

21

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி  சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்றதுடன் தினேஷ் சந்திமல் 34 ஓட்டங்களையும் கொடுத்தார். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Abrar Ahmed 4 விக்கெட்டுக்களையும் Naseem Shah 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group