குருந்தூர்மலை விகாரைக்குச் சென்ற மறவன்புலவு சச்சிதானந்தன்!

34

இலங்கையின் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் குருந்தூர் மலை பௌத்த விகாரைக்கு நேற்றைய தினம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து குருந்தூர் மலை பௌத்த விகாரையின் விகாராதிபதியுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் உட்பட அனைவருக்கும் சிறப்பு மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள பௌத்த துறவிகளுக்கு இடையில் குருந்தூர் மலையில் கடுமையான முரண்பாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Join Our WhatsApp Group