குடிபோதையில் வாகனம் ஓட்டியமை மற்றும் கைது செய்யப்படுவதை எதிர்த்த குற்றச்சாட்டின் காரணமாக நியூசிலாந்து நீதி அமைச்சர் கிரி ஆலன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்து நீதித்துறை அமைச்சர் கிரி ஆலன், கார் விபத்துக்குப் பிறகு, சோதனையின் மூலம் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபரில் நியூசிலாந்தின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் மாதத்திலிருந்து பதவி விலக பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அமைச்சரவையில் நான்காவது அமைச்சர் கிர்ரி ஆலன் ஆவார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர், கிரி அலன் பொலிஸாரால் 04 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதோடு, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் தனது கூட்டாளரிடமிருந்து பிரிந்த கிரி ஆலன், தனது ஊழியர்களுடன் மோசமான நிர்வாக உறவைப் பேணுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.