இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டமையினால் விமானத்தில் இருக்கைக்கு அருகே பெண் ஒருவர் சிறுநர் கழித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த பெண் பயணி கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார்.
ஆனால், விமானத்தின் கழிவறை பூட்டப்பட்டிருந்ததுடன், அப்பெண் கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து குறித்த பெண், தன்னை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கும்படி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரமாக அப்பெண் பயணி கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
குறித்த பெண் பயணி, விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்த வேலையிலேயே தன் இருக்கை அருகேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பார்ப்பவர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது