கருங்கடலை மையமாக கொண்டு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளினால் இலங்கைக்கான கோதுமை மா விநியோகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், ரஷ்ய – இலங்கை நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளருமான கலாநிதி சமன் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையிலும் கோதுமை மாவின் விலை விரைவில் அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் மற்றும் கிரிமியாவின் எல்லையில் அமைந்துள்ள கருங்கடல் சர்வதேச உணவு விநியோக வலையமைப்பில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது.
உலகின் முக்கிய விநியோகஸ்தர்களில் ஒன்றான உக்ரைன், பார்லி, சோளம் மற்றும் கோதுமை போன்ற தனது தானிய ஏற்றுமதிகளை கருங்கடல் வழியாக முன்னெடுக்கின்றது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தபோது, அது தொடர்பான அனைத்து துறைமுகங்களையும் முடக்க ரஷ்ய கடற்படை செயல்பட்டது.
இதனால் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் ரஷ்யாவும் உக்ரைனும் தானிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டன.
அதன்படி, உக்ரைனில் இருந்து கருங்கடலுக்கு சுமார் 310 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் மார்க்கத்தில் தானியங்கள் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஜூலை 17 ஆம் திகதியுடன் காலாவதியானது.
இதனையடுத்து உக்ரைனின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் சுமார் 60,000 மெட்ரிக் தொன் தானியங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கருங்கடலில் பயணிக்கும் அனைத்து சரக்கு கப்பல்களும் இராணுவ இலக்குகளாக கருதப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் கோதுமையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் இது ஆசிய நாடான இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?