கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் மீண்டும் நியமனம்

36

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமனம் -கலை இலக்கிய துறையினர் பெரு மகிழ்ச்சி!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயற்படுத்தி,விவேகமும், துடிப்புடனும் தனது சேவையை வழங்கி இருந்தார்.

இவர் மீண்டும் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை கலை இலக்கிய துறையினருடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த நவநீதன், முன்னாள் ஆளுநரால் திடீரென இடமாற்றப்பட்டார்.
இலங்கையின் நிர்வாக சேவை அதிகாரியான நவநீதன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பணியாற்றிய காலத்தில், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்.
இவர் துறைநீலாவணையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

Join Our WhatsApp Group