கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்

20

நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் நீரட சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இன்று (23) மதியம் 12.45 மணியளவில் கடலில் நீராடச் சென்ற போது இவ்வாறு காணாமல் போயுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம, சுன்னாகம், சாந்தபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20 முதல் 23 வயதுக்கு இடைக்கப்பட்ட மூன்று இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் உயிர்காப்பு படையினர் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group