இந்தோனேசியச் சந்தையில் பூனை, நாய் இறைச்சிக்குத் தடை

47

இந்தோனேசியாவின் சுலவேசி (Sulawesi) தீவில் உள்ள சந்தையில் பூனை, நாய் இறைச்சியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tomohon Extreme சந்தையில் பூனை, நாயுடன் வெளவால், எலி, பாம்பு, குரங்கு ஆகியவையும் விற்கப்பட்டுவந்தன.இந்தோனேசியாவில் பூனை, நாய் இறைச்சியின் வர்த்தகத்தை நிறுத்தியிருக்கும் முதல் சந்தை அதுவே என்று விலங்கு உரிமை அமைப்பு Humane Society International (HSI) தெரிவித்தது.

தடை மூலம் பல்லாயிரம் விலங்குகள் காப்பாற்றப்பட்டிருப்பதாக அது சொன்னது.அந்தச் சந்தையில் விலங்குகள் அடிக்கப்பட்டும் சுடப்பட்டும் கொல்லப்பட்டன.உயிருடன் இருக்கும்போதே அவற்றின் உரோமம் எரிக்கப்பட்டதாகவும் விலங்குநல ஆர்வலர்கள் கூறினர்.

உலகில் நாய், பூனை இறைச்சியின் விற்பனையை அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றும்.உள்ளூர்ப் பாரம்பரியம், கலாசாரம் காரணமாக அது அனுமதிக்கப்படுகின்றது.

Join Our WhatsApp Group