அரச பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பம்

38

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒகஸ்ட் 17 ஆம் திகதியுடன் நிறைவடையும். ஒகஸ்ட் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஒகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறும்.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் நொவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறும்.நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை விடுமுறை வழங்கப்படும்.

பின்னர் மூன்றாம் தவணையின் 2 ஆம் கட்டம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 16 வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group