வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள டொலர்களை அரசுடமையாக்கும் புதிய சட்டம்

21

அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகள் கொள்ளையிட்டு அல்லது குற்றங்கள் மூலம் சம்பாதித்து, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக்கொண்டு அரசுடமையாக்கக்கூடிய வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த சட்டத்தை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் புதிய சட்டமூல வரைவை தயாரித்து, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நீதியமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக ராஜதந்திர தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே கிடைத்துள்ள தகவல்களின்படி கறுப்பு பணமான பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணச் சலவைக்காக பல நாடுகளின் வங்கிகளில் வைப்பு மற்றும் வர்த்தகங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ள அரசியல்வாதிகள், பாதாள உலக குற்றவாளிகள் குறித்து உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன.

பனாமா பேப்பர்ஸ்,பென்டோரா பேப்பர்ஸ் ஆகியன மூலம் கறுப்பு பண முதலீடு தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தன.

Join Our WhatsApp Group