பம்பலப்பிட்டி பகுதியில் அலுவலகமென்ற பெயரில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியொன்றை வளான தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது விடுதியின் உரிமையாளர் உட்பட அலுவலக ஊழியர்களென விபசாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வளான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் கொழும்பை சுற்றியுள்ள அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் தமது கடமைகளை முடித்துக்கொண்டு இந்த இடத்திற்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு மேலதிக வருமானம் ஈட்டிவந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சில பெண்கள் இந்த இடத்தில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் அலுவலக வேலைக்குச் செல்வதாகவும், பகலில் அந்த இடம் காலியாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பெண்ணுக்கு 9 ஆயிரம் ரூபாவை வாடிக்கையாளர்கள் செலுத்தியுள்ளதுடன், முழு இரவையும் கழித்தால் அவர்களிடம் 30 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் வளான தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டடத்துக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. (நன்றி – ஒருவன்)