(கனகராசா சரவணன்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை இன்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே திவித்தார்.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன வின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் மா அதிபர் எம்.பி.லியனகே , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எதிர்மன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். ஏ.கே பண்டார ஆகியோரின் வழிகாட்டலில்.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையில் பி.எஸ்.டபிள்யூ.எம்.ஏ.வௌகெதர, எம்.ஜி. நிஷhந்த வி.அருள்குமார், ஏ.கே.ஐ. மிஹிரங்க, வி.ருஷந்தன், டபிள்யூ.ஜி.எல்.ஆர். வத்தேகெதர, டி.எம்.ஆர்.பி. பண்டார, கே.தனுஷன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.


இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு பதுக்கிவைத்திருந்த கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரர்ரில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.