இந்திய விஜயத்தை வெற்றிகரமாக முடித்துகொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி

40

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த 4 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில்,

  • யுபிஐ பணப் பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்ள ஒப்பந்தம்
  • இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உதவும் வகையில் ஒப்பந்தம்
  • நாகை – காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம்உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
Join Our WhatsApp Group