அம்பலாங்கொடையில் மரம் முறிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

15

அம்பலாங்கொடை அக்குரஸ்ஸ பகுதியில் மரமொன்று முறித்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் மரமொன்று முறிந்து வாகன பழுது பார்க்கும் நிலையத்தின் மீது விழுந்ததில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group