“இந்தியா மற்றும் இலங்கை இடையே விமான இணைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் உடன்படுகிறோம். வர்த்தகம் மற்றும் மக்களின் பயணத்தை அதிகரிக்க, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம்…” இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர் ஒப்பந்தங்கள் கைச்சாற்றப்பட்டன. இந்த நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கமே வரவேற்று பேசிய நரேந்திர மோடி ;
“இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் அவரது தூதுக்குழுவை நான் வரவேற்கிறேன். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர்.ஆனால் நெருங்கிய நண்பரைப் போன்று நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோளாக நின்றோம்”
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கை மற்றும் ‘SAGAR’ பார்வை இரண்டிலும் இலங்கையும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இன்று நாங்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்களும் வளர்ச்சியும் பின்னிப்பிணைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம் ‘ என பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறுகையில், “இன்று, மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தோம். மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்த விவகாரத்தில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். இலங்கையின் சமத்துவ அணுகுமுறையை நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க நம்புகிறார். நீதி மற்றும் சமாதானம், 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அமுல்படுத்துவதற்கான உறுதிமொழியை அது நிறைவேற்றும் என நம்புகிறோம்…”
புதிய மற்றும் முன்னுரிமைப் பகுதிகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு இந்தியா-இலங்கை இடையேயான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.