யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் விசேட சொகுசு ரயிலொன்றை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் சேவையில் முதலாம் வகுப்பு பெட்டிகள் எட்டும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இரண்டும் உள்ளன.
மேலும், நாளாந்தம் இரவு பத்து மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதிகாலை ஆறு மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, கொழும்பு நோக்கி அதேநாள் இரவு பத்து மணிக்கு புறப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சொகுசு ரயில் சேவையின் முதல் வகுப்பிற்கான கட்டணம், 4000 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.