பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கு 3 பில்லியன் நிதியுதவியை வழங்கிய மோடி

56

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்காக 3 பில்லியன் ரூபா (இந்திய மதிப்பு 750 மில்லியன்) நிதியை வழங்கியுள்ளார்.

இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரதமர் மோடியை ஹைத்ராபாத் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி தலைமையில் இந்தியா சென்ற குழுவில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இடம்பெற்றிருந்தார்.

இந்தச்சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

இலங்கை – இந்திய உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தச் சந்திப்பு இருந்ததை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் பெருந்தோட்ட மக்களின்  அபிவிருத்திக்கான மானிய உதவியாக 750 மில்லியன் இந்திய ரூபாவை (இலங்கை மதிப்பில் 3 பில்லியன்) வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியேளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு பல்வேறு பொருளாதார உதவிகளை அளிப்பதாக பிரதமர் மோடி இந்த சந்திப்பில் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group