பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா உடனடி தடை

13

இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்துள்ளது.அங்கு மோசமான பருவமழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்ச் சந்தையில் அரிசி விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் போதுமான அளவு அரிசி இருப்பதை உறுதி செய்யவும் ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு உணவு அமைச்சு தெரிவித்தது.

இந்தியா உலகளவில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான அரிசி ஏற்றுமதிகளைச் செய்கிறது.

ஏற்றுமதி தடையால் ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை என்று இந்திய அரசாங்கம் நேற்று (20 ஜூலை) கூறியது.

இந்தியாவின் முடிவால் ஆப்பிரிக்க நாடுகளே அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Join Our WhatsApp Group