பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

19

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023, நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றமை திருத்தப்பணிகளுக்கு மேலும் இடையூறாக உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான விடைத்தாள் மதிப்பீடு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் சில அதிபர்கள் ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிகளுக்கு அனுமதிக்காமை சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முடிவடைந்த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு மூன்று மாதங்களுக்கும் மேலாக தாமதமாகியிருந்து.இருப்பினும், 2022ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் எனவும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group