தெற்கு பிரேசிலில் பிரசித்திபெற்ற இகுவாஸு அருவி அமெரிக்காவின் நயாகரா அருவி போன்று மாறியுள்ள நிலையில் அதனை காண சுற்றுலாவாசிகள் குவிந்து வருவதாக கூறப்படுகின்றது.பிரேசிலின் ஃபோடோ இகுவாஸு நகரில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது.இதனால் இகுவாஸு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இகுவாஸு அருவியில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை
இதன் காரணமாக இகுவாஸு அருவியில் 6 மடங்கு அதிகம் வெள்ளம் கொட்டுகிறது. இந்நிலையில் நயாகரா அருவி போன்று மாறியுள்ளதால் அதை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இந்த அருவியில் வினாடிக்கு 15 லட்சம் கனஅடி வெள்ளம் பாயும் நிலையில் தற்போது அது 25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.மேலும் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் இகுவாஸு ஆறு பாயும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.