கண்டி, பல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரம்சீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) திறந்தவெளிச் சிறைச்சாலையின் பயிர்ச்செய்கைப் பிரிவில் பணிபுரிந்த போது, அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடிய வேளையில் குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மகாவலி ஆற்றில் குதித்த நபர் காணாமல் போன நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பல்லேகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அப்பகுதியை சுற்றிவளைத்த அதிகாரிகள் உயிரிழந்தவரின் சடலத்தை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.