சரத் வீரசேகர ஒரு மனநோயாளி – செல்வம் எம்.பி சபையில் காட்டம்

13

சரத் வீரசேகரவை போர் காலத்தில் சமையல் அறையில் வைத்திருந்ததன் காரணமாக அவர் தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் 13 ஐ தரமாட்டேன் என கூறுகின்றார். அவரும் இந்த அரசியல் சாசனத்தை மீறுகின்றார். இவர் கடற்படையிலே இருந்து இந்த அரசியல் சாசனத்தை மதித்தவர் என்றால் இவருடைய கருத்துக்கள் அரசியல் சாசனத்தை எதிர்க்கின்ற கருத்துக்களாகவே இருக்கின்றது.

அது மட்டுமல்ல எங்களின் சமஸ்டி முறையை தர மாட்டேன் என்கிறார். 13 மற்றும் குறுந்தூர் மலையில் வழிபாடுகளை நடத்த முடியாது என்கிறார். இவர் யார்? இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார்.

இவர் யார்? இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார்.

அத்தோடு கனடா தூதுவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவையும் சாடுகின்றார். பொருளாதார ரீதியில் உலக நாடுகளின் ஆதரவு தேவைப்படுகின்ற போது, அந்த ஆதரவை பெற்றுக்கொண்டு அதில் சாப்பிட்டுக்கொண்டு, அதில் வயிற்றை வளர்த்துக்கொண்டு இருக்கின்ற சரத் வீரசேகர எந்த அடிப்படையில் எங்களில் ஞாயமான கருத்தை அவர் எதிர்கின்றார். அந்த அடிப்படையில் தான் நாங்கள் சொல்கிறோம் அவர் ஒரு மனநோயாளி என்று ஆகவே இந்த சபையிலிந்து அவரை நீக்க வேண்டும், அவரின் கட்சி சார்ந்தவர்கள் அவரை அடிக்கி வைக்க வேண்டும். எங்களுடைய மக்கள் பல போராட்டங்களை பார்த்தவர்கள் அவர்களை சீண்ட வேண்டாம். உங்களுடைய கதைகளை உங்களோடு வைத்திக்கொள்ளுங்கள். பத்திரிகைகள் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

அகவே எங்களது மக்களை தொடர்ந்து சீண்டி பார்க்க வேண்டாம். இங்கு சரத் வீரசேகரவுக்கு நான் சவால் விடுகிறேன். மீண்டும் மீண்டும் எங்களது மக்களை சீண்டுவீர்களாக இருந்தால் எங்களது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று எச்சரிக்கின்றேன். என்றார்.

Join Our WhatsApp Group