கந்தளாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிணற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பொலிஸ் சார்ஐன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கிணற்றின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த அதிகாரி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் போல் ரொஷான் தெரிவித்தார்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட் வீதி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஜனக சுரஞ்சிவ என்ற பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.