உலக சுகாதார ஸ்தாபன இலங்கை பிரதிநிதி எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

47

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr.Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்நாட்டில் தற்போது எழுந்துள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தரம் குறைந்த பதிவு செய்யப்படாத மற்றும் அதிக விலைக்கு நாட்டிற்கு கொண்டு வந்த மருந்துகளால் அப்பாவி நோயாளிகள் உயிரிழந்துள்ளமை, அரச மருத்துவமனைகளில் CT scan,MRI Scan போன்ற இயந்திரங்களின் தட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின்றி குறித்த இயந்திரங்களைப் பயன்படுத்துதல், வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

Join Our WhatsApp Group