ஆகஸ்ட் முதல் யாழ் – கொழும்பு சொகுசு ரயில் சேவை

64

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ரயிலின் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group