**மின்சாரம், திருகோணமலை அபிவிருத்தி தொடர்பாக மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
** 13 A பல்கலைக்கழகங்களை கூட அமைக்க மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லி விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நாளைய தினம் மேற்கொள்ளப்படும் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக நியமிப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.
இந்திய ரூபாய் உடனான பரிவர்த்தனைகள் – RuPay கார்டு மற்றும் RuPay வழிமுறை – இந்தியாவால் ஊக்குவிக்கப்படுகிறது. தவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்காகவும் திருகோணமலையை பெட்ரோலிய மையமாக மேம்படுத்துவதற்காகவும் மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது பரிமாறிக்கொள்ளப்படும். இந்தியா ஏற்கனவே திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமல் 13வது திருத்தத்தை அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவதற்கான தனது முன்முயற்சிகள் குறித்து ஜனாதிபதி இந்திய தலைவர்களுக்கு விளக்கமளிப்பார் என டெய்லி மிரர் அறிகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட திருத்தத்திற்கு அமைய மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவுவதற்கான சட்டமூலமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
நல்லிணக்கச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் நிறுவப்பட்டு, பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கைகள் குறித்து இந்திய தலைவர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.