ஜேர்மன் தலைநகரில் சுற்றித்திரியும் சிங்கம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

23

ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அருகில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து சிங்கமொன்று மக்கள் குடியிருப்பிற்குள் வந்துள்ளதை காண்பிக்கும் படம் இன்று டுவிட்டரில் வெளியாகியிருந்தது.இதனை தொடர்ந்து அதனை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறுஅறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை உள்ளுர் மிருகக்காட்சி சாலைகளும் சரணாலயங்களும் சிங்கம் எதுவும் தப்பி வெளியேறவில்லை என குறிப்பிட்டுள்ளன.சிங்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரித்துள்ள பொலிஸார் அவர்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளதுடன் செல்லப்பிராணிகள் குறித்தும் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிங்கத்தினை தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் மயக்கஊசிகளுடன் வேட்டைக்காரர்களையும் மிருகவைத்தியர்களையும் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Join Our WhatsApp Group