11,000 புள்ளிகளைத் தாண்டிய ASPI

14

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று ( 20) 11,000 புள்ளிகளைத் தாண்டியது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 11,026.83 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இது முந்தைய நாளை விட 0.91% (99.54) அதிகரிப்பாகும்.

இன்றையநாளில் ஒட்டுமொத்தமாக 156 மில்லியனுக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டு, பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 4.17 பில்லியன்களாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் இன்று முந்தைய நாளை விட 1.04% (33.27 புள்ளிகள்) அதிகரித்து 3,217.81 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group