யாழ் வைத்தியசாலைகளில் பக்கவாத மருந்துகளுக்கு தட்டுப்பாடு

48

வடக்கில் பக்கவாதத்திற்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார்.

பக்கவாதம் ஏற்பட்ட நோயாளர்களை நான்கரை மணித்தியாலத்திற்குள் வைத்திய சாலைக்கு அழைத்து செல்வதன் மூலம் உடனடியாக உரிய பரிசோதனை மேற்கொண்டு மூலையில் எவரான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு அதற்குரிய நடவடிவகை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான 85 வீதமான காரணம் மூளையில் ஏற்படுகின்ற இரத்த அடைப்பு ஆகும்.

எனவே இந்த பக்கவாதத்தை குணப்படுத்துவதற்குரிய மருந்துகள் தற்போது உலகளாவிய ரீதியில் வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இது சம்பந்தமான சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள நாட்டில் மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பக்கவாதத்திற்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார்.

எனினும் மருந்து தட்டுப்பாட்டை கருத்தில் கொள்ளாது நாங்கள் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறோம் ஆனால் தற்போது பக்கவாதத்துக்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்னையாக மாறியுள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group